முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மேற்குவங்க பெண் மீட்பு: வாலிபர் தலைமறைவு

சிதம்பரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 22 வயது மேற்குவங்க இளம்பெண்ணை இரவு ரோந்தின் போது சிதம்பரம் டிஎஸ்பி மற்றும் போலீஸார் மீட்டனர். தலைமறைவான அப்பெண்ணுடன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

சிதம்பரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 22 வயது மேற்குவங்க இளம்பெண்ணை இரவு ரோந்தின் போது சிதம்பரம் டிஎஸ்பி மற்றும் போலீஸார் மீட்டனர். தலைமறைவான அப்பெண்ணுடன் வந்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது முத்தையாநகர் அருகே மீதிகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணுடன் சென்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் மீதிகுடி சாலையில் உள்ள வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது போலீஸார் உள்ளே வைத்து வெளிக்கதவை தாழிட்டு வாலிபர் தலைமறைவானார். பின்னர் போலீஸார் கதவை உடைத்து வெளியே வந்தனர். பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கடலூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நகர போலீஸார் தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.