டர்பன் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 500ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது
இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை தொடர்ந்து ஆடத்தொடங்கிய தென்னாப்பிரிக்கா நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 5விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. இதனைதொடர்ந்து போட்டியின் 4வது நாளான இன்று தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக ஆடியது. சிறப்பாக ஆடிய காலிஸ் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறியபோது ரசிகர்கள் எழுந்து நின்று அவரை உற்சாக வழியனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்தபோது மழைக்காரணமாக ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் காலிஸ் 115 ரன்களும், ஏபி டி வில்லியர்ஸ் 74 ரன்களும், பீட்டர்சென் 62 ரன்களும், ராபின் பீட்டர்சன் 61 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்தர ஜடேஜா 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.