2வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்கள் எடுத்து ஆட்டம்
இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை தொடர்ந்து ஆடத்தொடங்கிய தென்னாப்பிரிக்கா நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 5விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. இதனைதொடர்ந்து போட்டியின் 4வது நாளான இன்று தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்துள்ளது.
சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறியபோது ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாக வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் மழைக்காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.