சிதம்பரத்தில் ரூ.37 லட்சம் செலவில் சித்தமருத்துவ மருத்துவமனை திறப்பு
சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.37 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 15 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவப்பிரிவு மருத்துவமனையை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா
சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.37 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 15 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவப்பிரிவு மருத்துவமனையை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கானொளி மூலம் திங்கள்கிழமை காலை 12.10 மணிக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தமிழரசன், மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி அமுதா சிவானந்தம், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எம்.அர்ச்சுணன், ஹோமியோபதி டாக்டர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.5 கோடி செலவில் லிஃப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கொண்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காலை கானொலி தொலைக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.