விருதுநகரில் இளைஞர் காவல் சிறப்பு படைக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித் தேர்வு ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதல் நாளில் 574 பேர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு இளைஞர் காவல் படைக்கு 320 காலிப்பணியிடங்கள் உள்ளனர். இப்பணிக்கான தேர்வு எழுத 6071 பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கு நவ.10ம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் 5654 பேர் பங்கேற்றதில், 1714 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான அடுத்த கட்ட தேர்வான சான்றிதழ் சரிபார்த்தல், உடல் தகுதி தேர்வு ஆகியவை கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், முறைகேடுகள், வெளியாள்களின் நடமாட்டம் இல்லாமல் நடைபெறுகிறதா என்பதை மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் ஆனந்தசோமானி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர். அதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பவர், உயரம் எடுத்தல், மார்பளவு எடுத்தல், 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்டவைகளை ஒவ்வொரு நடவடிக்கையையும் நேரில் சென்று பார்வையிட்டார். காவலர்கள் யாரும் கூட்டமாக நிற்காமல் அதற்கென நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளர்களும், தேர்வுக்கு வந்தவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தேர்வு நிகழ்வுகள் அனைத்தையும் கட்டாயம் வீடியோவில் படம் பிடிக்க வேண்டும் எனவும் காவல் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி உத்தரவிட்டார்.
இதில், தாமதமாக 20-க்கும் மேற்பட்டோர் தாமதமாக வந்தவர்களை நுழைவு வாயிலில் காவல் அதிகாரிகள் அழைப்பாணை, அடையாள அட்டை ஆகியவைகளை சரி பார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வு நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் வெளியாள்களின் வரத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து அனைத்து டி.எஸ்.பிக்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.