நியூசிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு: யுவராஜ்சிங் தேர்வுசெய்யப்படவில்லை
இந்திய அணி வரும் ஜனவரி 19 ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டி தொடரில் கலந்து கொள்கிறது. அங்கு 5 ஒரு நாள் போட்டியிலும், இரண்டு டெஸ்ட் போட்டியிலும்
இந்திய அணி வரும் ஜனவரி 19 ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டி தொடரில் கலந்து கொள்கிறது. அங்கு 5 ஒரு நாள் போட்டியிலும், இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கிறது. இதில் பங்கற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த தொடரில் அதிரடி வீரர் யுவராஜ்சிங் தேர்வு செய்யப்படவில்லை. அறிமுக வீரர் ஈஸ்வர் பாண்டே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி அணியில் இடம்பிடித்துள்ளார். மற்றொரு அறிமுக வீரர் பின்னி ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஒரு போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விபரம்:
தோனி, ஷீகர் தவான், ரோகித் சர்மா. வீராட் கோலி.அஜின்கியா ரகானே அம்பதி ராயுடு. சுரேஸ் ரெய்னா, அஸ்வின், ரவீந்தர் ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, இஸாந்த் சர்மா, அமித் மிஸ்ரா,ஸ்டார்ட் பின்னி, வருண் ஆரோன்
டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் விபரம்:
தோனி, ஷீகர் தவான், முரளிவிஜய், சட்டீஸ்வர் புஜாரா, வீராட் கோலி, ரோகித் சர்மா, அஜின்கியா ரகானே, ரவீந்தர் ஜடேஜா, ஜாகீர்கான், முகமது சமி, இஸாந்த் சர்மா, அம்பதி ராயுடு, புவனேஸ்வர் குமார், அஸ்வின், உமேஸ்யாதவ், விரித்திமான் சஹா, ஈஸ்வர் பாண்டே,