தற்போதைய செய்திகள்

குடும்பத் தகராறில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சௌந்தர் என்பவரின் மகன் ஆரோக்கியராஜ்(34). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ஷீலா(30) என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில்

எஸ். பாண்டியன்

விருதுநகரில் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியார் ஆகியோரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சௌந்தர் என்பவரின் மகன் ஆரோக்கியராஜ்(34). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ஷீலா(30) என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் இருந்து பிரிந்து தாயார் வீட்டிற்கு வந்தாராம்.கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தகராறு செய்யமாட்டேன் எனக் கூறி வாழ வரும்படி கூறி அழைத்துச் சென்றாராம். இந்நிலையில் மறுபடியும் திங்கள்கிழமை இரவு பிரச்னை செய்துள்ளார்.

இது தொடர்பாக ஷீலாவின் தாயார் மரியம்புஷ்பம் தட்டிக் கேட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ஆரோக்கியராஜ் அருகில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியையும், மாமியாரையும் வெட்டிதில் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தூக்கி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக ஷீலாவின் சகோதரர் ஜேசுராஜ் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT