தற்போதைய செய்திகள்

நிலத் தகராறில் விவசாயியைக் கொன்ற கல்லூரி மாணவர் கைது

அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் சரகம்,சுள்ளங்குடியைச் சேர்ந்தவர் அயோத்தி(55) இவரது மகன் திருமுருகன்(19). விழுப்பனங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா(55) இவரது மகன் கார்த்திக்

மீனாட்சி

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாயியை அடித்துக் கொன்ற கல்லூரி மாணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் சரகம்,சுள்ளங்குடியைச் சேர்ந்தவர் அயோத்தி(55) இவரது மகன் திருமுருகன்(19). விழுப்பனங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா(55) இவரது மகன் கார்த்திக்(21). அயோத்திக்கும், காட்டுராஜாவுக்கும் சுள்ளங்குடியில் அருகருகே வயல் உள் ளது. இந்நிலையில்  அயோத்தி வயலுக்கு பணிக்காக டிராக்டரை காட்டுராஜா வயல் வழியாகக் கொண்டு செல்வதில் இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம்.  இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலை அயோத்தி மீண்டும் இது தொடர்பாக பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அயோத்தியை கல்லூரி மாணவரான கார்த்திக் கட்டையால் தாக்கியதில் பலத்தக் காயமடைந்து அதே இடத்தில் இறந்தார்.

இது குறித்து திருமானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காமராஜ்  வழக்குப் பதிந்து  கார்த்திக்கை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

SCROLL FOR NEXT