தற்போதைய செய்திகள்

பீர் பாட்டிலால் தாக்கியதில் சிறுவன் படுகாயம்: இளைஞர் கைது

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ராஜ்குமாரின் என்பவரின் மனைவி ரோஸ்மேரி(28). இவரது கணவர் இறந்து விட்டதால் தனது மகன் கார்த்திக் உடன் வாழ்ந்து வருகிறார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அகதிகள் முகாமில் முன்விரோதம் காரணமாக சிறுவனை பீர் பாட்டிலால் தாக்கி காயம் ஏற்படுத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ராஜ்குமாரின் என்பவரின் மனைவி ரோஸ்மேரி(28). இவரது கணவர் இறந்து விட்டதால் தனது மகன் கார்த்திக் உடன் வாழ்ந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் பரமானந்தம் என்பவரின் மகன் நந்தகோபால்(34). இவர் ரோஸ்மேரியை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து வந்துள்ளார். கடந்த 4 நாள்களுக்கு முன்பு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மானபங்கம் செய்யவும் முயன்றாராம். இதையடுத்து சத்தம் போட்டதினால் அக்கம் பக்கத்தில் உள்ளோர் பார்த்து காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை காலையில் ரோஸ்மேரியின் மகன் கார்த்திக் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து அங்கு வந்த நந்தகோபால் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து சிறுவனை காப்பாற்றி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து ரோஸ்மேரி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் நந்தகோபால் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT