முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி- பயங்கர ஆயுதங்களால் பஸ்ஸில் தாக்கிக் கொண்ட மாணவர்கள்: பயணிகள் ஓட்டம்

தூத்துக்குடி அருகே பயங்கர ஆயுதங்களால் பள்ளி மாணவர்கள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். இதில் பயந்து போன பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:20 AM
பகிர்:

தூத்துக்குடி அருகே பயங்கர ஆயுதங்களால் பள்ளி மாணவர்கள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். இதில் பயந்து போன பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில், பஸ் ஒன்று காலை வழக்கம்போல் சென்றது. பஸ்ஸில் பயணிகள் அதிகம் இருந்தனர். அவர்களிடையே காலை பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் இருந்தனர். அந்த பஸ், முப்பாத்து ஓடை என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, திடீரென அந்த பஸ்ஸில் இன்னொரு மாணவர்கள் குழு ஏறியது. அதுவும், கைகளில் கம்பு கட்டைகளுடன்! ஏறிய கும்பல், பஸ்ஸில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட இன்னொரு தரப்பு மாணவர்களை சரமாரியாக தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்களும் திருப்பித் தாக்கினர். இந்த அடிதடி ரகளையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

ஓட்டுநர் உடனடியாக பஸ்ஸை தென்பாகம் காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார். தென்பாகம் போலீஸார் புகார் பதிவு செய்து, தப்பியோடிய மாணவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.