அறிவித்தது ரூ.15ஆயிரம், அளிப்பது ரூ.5 ஆயிரம்தான்: உழவர் முன்னணி கண்டனம்
தமிழகஅரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் பேரிடர் நிவாரணம், பயிர் காப்பீடு மூலம் கிடைக்கும் தொகை போக
தமிழகஅரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் பேரிடர் நிவாரணம், பயிர் காப்பீடு மூலம் கிடைக்கும் தொகை போக தமிழக அரசு கொடுக்கும் தொகை ரூ.5 ஆயிரம் தான். தமிழகஅரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக உழவர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளதோ, வெறும் 3.61 லட்சம் ஏக்கருக்குதான். மேலும் 50 விழுக்காட்டிற்கு குறைவாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிறுவனம் கொடுக்க போகும் தொகையை தவிர வேறு நிவாரணமும் இல்லை. இந்த ஆண்டு பயிரை காக்க மிகுந்த பொருட்செலவிட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழகஅரசின் இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரிப் பாசன பகுதிகளில் வறட்சி இந்திய, கர்நாடக அரசுகளால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை. இதனால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மரணத்தை கூட வறட்சியால் ஏற்பட்டது என்பதை ஏற்க மறுக்கும் தமிழகஅரசிற்கு உழவர் முன்னணி கண்டனம் தெரிவிக்கிறது.
எனவே தமிழகஅரசு பயிர் காப்பீடு தொகையை கணக்கில் கொள்ளாமல் இழப்பீடு தொகையை ரூ.25ஆயிரமாக உயர்த்த வேண்டும், 50 விழுக்காட்டிற்கு குறைவாக மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு விழுக்காட்டிற்கு ஏற்பட நிவாரணத் தொகை வழங்க வேண்டும். கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை, டெல்டா பகுதிகளாக தெளிவாக தமிழகஅரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை காலக்கெடு மாற்றி அமைப்பதை கைவிட்டு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கான தொகையை மத்தியஅரசிடமிருந்து கோரி பெற வேண்டும் என அறிக்கையில் சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.