சிதம்பரம் அருகே இளைஞர் மர்மசாவு!
சிதம்பரம் அருகே புவனகிரி பு.உடையூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காயங்களுடன் தூக்கு மாட்டிய நிலையில்
சிதம்பரம் அருகே புவனகிரி பு.உடையூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காயங்களுடன் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரது மகன்கள் தில்லிராஜ், புதுராஜ், சின்ராஜ் ஆகிய மூவரும் புவனகிரி அருகே உள்ள பு.உடையூரில் உள்ள பாட்டி சீதா வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர். இந்நிலையில் தில்லிராஜ் (24)அங்குள்ள தோப்பில் உடலில் காயங்களுடன் வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.