விருதுநகர் அருகே 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
விருதுநகர் அருகே ரேஷன் அரிசியை மொபட்டில் கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த
விருதுநகர் அருகே ரேஷன் அரிசியை மொபட்டில் கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 34 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் உணவு கடத்தல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அழகர்சாமி உத்தரவின் பேரில் போலீஸார் அருப்புக்கோட்டை-தூத்துக்குடி சாலையில் இன்று அதிகாலை ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மொபட்டில் வந்த ஒருவரை வழிமறித்து சோதித்தனர். அவர் 25 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் ரேஷன் அரிசியை வைத்திருந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கோவிலாங்குளத்தில் அவர் பதுக்கி வைத்திருந்த 33 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதனை வைத்திருந்த கோவிலாங்குளத்தைச் சேர்ந்த ராமசாமி (35) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.