முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரியில் பாதுகாவலர்களாக பணியாற்றி வந்த 4 பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:26 AM
பகிர்:

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரியில் பாதுகாவலர்களாக பணியாற்றி வந்த 4 பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

வேளாண் கல்லூரியின் பாதுகாவலர்களாக பணியாற்றி வந்த நான்கு ஊழியர்களான பிரபு, முருகதாஸ், மீனாட்சி சுந்தரம், கார்த்திகேயன் ஆகியோர் பூச்சி மருந்து முடித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உட்பட 6 பேர் கல்லூரியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை அறிந்து மேற்கூறிய நான்கு பேரும், வேளாண் கல்லூரியின் அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இது குறித்து சிதம்பரம் ஏஎஸ்பி எம். துரை நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments