அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பினர் ஊழியர்கள் தற்காலிக வேலை நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பினர் ஊழியர்கள் தற்காலிக வேலை நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 4 பாதுகாவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும், பல்கலைக்கழகத்தின் வேளாண் புல முதல்வர் ஆர்.எம். கதிரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் துணை வேந்தர் வீட்டு வாசலில் சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயச்சந்திரன், ஊழியர் சங்கத் தலைவர் மதியழகன் ஆகியோர் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்ற வருகிறது.
Advertisement
இதனால் பல்கலைக்கழக வளாகத்துக்கும், துணைவேந்தர் வீட்டுக்கும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.