சிதம்பரத்தில் உண்டியல் உடைத்து திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது
சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள ஆஞ்சநேயர்கோயிலில் சனிக்கிழமை இரவு சிதம்பரம் கஞ்சித்தொட்டி சந்தைச் சேர்ந்த அசோக் (25), ஈரோடு மாவட்ட பவானி பெரிய மாரியம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (25) ஆகிய இருவரும்
சிதம்பரத்தில் கோயில் உண்டையிலை உடைத்து திருட முயன்ற இரு இளைஞர்கள் நகர போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள ஆஞ்சநேயர்கோயிலில் சனிக்கிழமை இரவு சிதம்பரம் கஞ்சித்தொட்டி சந்தைச் சேர்ந்த அசோக் (25), ஈரோடு மாவட்ட பவானி பெரிய மாரியம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (25) ஆகிய இருவரும் சேர்ந்து உண்டியலை உடைத்து திருட முயன்றனர். அப்போது இரவு ரோந்து வந்த நகர போலீஸார் இருவரையும் பிடித்தனர். ராஜாகுருக்கள் கொடுத்த புகாரின் பேரில் நகர குற்றப்பிரிவு போலீஸார் மேற்கண்ட இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.