வீராணம் ஏரி வறண்டதால், கீழணையிலிருந்து ஏரிக்கு தண்ணீர் திறப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும். போதிய மழை இல்லாததாலும், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடப்படாததால் மேட்டூரிலிருந்து போதிய நீர் கிடைக்காததாலும் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இன்றி படி, படியாக குறைந்தது. இதனால் கடந்த வாரம்
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி வறண்டதால், கீழணையிலிருந்து ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படடுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியாகும். போதிய மழை இல்லாததாலும், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடப்படாததால் மேட்டூரிலிருந்து போதிய நீர் கிடைக்காததாலும் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இன்றி படி, படியாக குறைந்தது. இதனால் கடந்த வாரம் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்போது இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர் மட்டும் வெறும் 9 மில்லியன் கனஅடியாக குறைந்து வறண்டு காட்சியளித்தது. இதனால் கீழணையிலிருந்து பொதுப்பணித்துறையினரால் இன்று காலை முதல் விநாடிக்கு 200 கனஅடி வடவாறு மூலமாக வீராணம்ஏரிக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.கீழணையின் மொத்தக் கொள்ளளவு 9 அடியாகும். கீழணையில் திங்கள்கிழமை நிலவரப்படி இரண்டரை அடிதான் நீர் உள்ளது. இந்நிலையில் கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம்ஏரிக்கு 200 கனஅடி திறக்கப்பட்டு, மாலை 100 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.