முகப்பு
தற்போதைய செய்திகள்

கிள்ளையில் மாசிமக தீர்த்தவாரி: திரண்ட மக்கள்

மாசி மக உற்சவத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான், தில்லை கோவிந்தராஜப் பெருமாள் மற்றும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:36 AM
பகிர்:

சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது.

மாசி மக உற்சவத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான், தில்லை கோவிந்தராஜப் பெருமாள் மற்றும் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெருமாள், முருகன், அம்மன் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட சுவாமிகள் கிள்ளை முழுக்குத்துறை ஆற்றில் தீர்த்தவாரி வழங்கி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் நீராடி மூதாதையர்களுக்கு சிராத்த்தம் செய்து வணங்கினர். கிள்ளை பேருராட்சி தலைவர் வித்யாதித்தன், செயல்அலுவலர் ஆறுமுகம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வரவேற்பு அளித்தனர்.

பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கடற்கரையில் குறிஞ்சிப்பாடி பூவராயர், பரங்கிப்பேட்டை மு்த்துக்குமரசாமி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரி வழங்கி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏஎஸ்பி எம்.துரை தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெறுவதால் இந்த ஆண்டு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கிள்ளை தீர்த்தவாரி உற்சவத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →