முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி.யில் முதல்வர் பிறந்தநாள் அன்று ஜெ என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டு பிறந்துள்ள கன்றுக்குட்டி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பசு ஒன்று ஜெ என்ற ஆங்கில எழுத்து தலையில் நெற்றியில் தனியே

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி.யில் முதல்வர் பிறந்தநாள் அன்று ஜெ என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டு பிறந்துள்ள கன்றுக்குட்டி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பசு ஒன்று ஜெ என்ற ஆங்கில எழுத்து தலையில் நெற்றியில் தனியே

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:36 AM
பகிர்:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பசு ஒன்று ஜெ என்ற ஆங்கில எழுத்து தலையில் நெற்றியில் தனியே பொறிக்கப்பட்டவாறு பிறந்துள்ளது. இதனை அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கண்டு, மாலையிட்டு வணங்கிச் செல்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர், குலாளர் தெருவில், நகர்மன்ற கோட்டத்தலைவாசல் தொடக்கப் பள்ளிக்கு எதிரே குடியிருந்து வருபவர் சுப்பன் செட்டியார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் பசு வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சினை பிடித்திருந்த அந்த பசு ஞாயிற்றுக்கிழமை மாலை கன்று குட்டி ஒன்றை போட்டது. பிரௌன் நிறத்தில் உள்ள அந்த பெண் கன்றுக் குட்டியின் முகத்தில் நெற்றியில் ஆங்கிலத்தில் ஜெ என்ற எழுத்து தனியே வெள்ளை நிறத்தில் உள்ளது.

இது குறித்து அறிந்த ஏராளமான அ.தி.மு.க.வினர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த கன்றுக் குட்டிக்கு மாலையிட்டு வணங்கினர். மேலும் பொங்கல் இட்டு வழங்கப்பட்டது.தற்போது ஏராளமான பொது மக்கள் இந்த கன்றுக் குட்டியை பார்த்துச் செல்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →