முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹைதராபாத் குண்டு வெடிப்பு எதிரொலி: ஸ்ரீஆண்டாள் கோயிலில் பலத்த பாதுகாப்பு

ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தை, காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலு

தற்போதைய செய்திகள்

ஹைதராபாத் குண்டு வெடிப்பு எதிரொலி: ஸ்ரீஆண்டாள் கோயிலில் பலத்த பாதுகாப்பு

ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தை, காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:38 AM
பகிர்:

ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தை, காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று வந்த தகவலை அடுத்து புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கோயிலின் 4 பக்கங்களையும் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீஆண்டாள் கோயில் கோபுரம் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. நாள்தோறும் நாடடின் பல பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தகவல் வந்த உடன், கோயிலின் 4 பக்கங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. ஸ்ரீஆண்டாள் கோயில் முழுவதும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய், மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனை செய்யப்பட்டது. பின்னர் ஆயுதப்படை போலீஸார் கோயில் பாதுகாப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

இதனையடுத்து இப் பகுதியைக் கடந்து பள்ளி செல்லும் மாணவ மாணவியர் வேறு பாதை வழியே செல்ல அறிவுரைப்படுத்தப்பட்டனர். கோயிலினுள் கடைகள் வைத்திருப்பவர்கள், பொது மக்கள், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் கோயில் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து போலீஸார் கூறுகையில் மறு உத்தரவு வரும்வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →