சண்டையை விலக்கிவிடச் சென்றவர் கொலை: இளைஞருக்கு 5 ஆண்டு கடுங்காவல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சண்டையை விலக்கிவிடச் சென்ற இளைஞரை சோடா பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு
தற்போதைய செய்திகள்சண்டையை விலக்கிவிடச் சென்றவர் கொலை: இளைஞருக்கு 5 ஆண்டு கடுங்காவல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சண்டையை விலக்கிவிடச் சென்ற இளைஞரை சோடா பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சண்டையை விலக்கிவிடச் சென்ற இளைஞரை சோடா பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இலந்தைக்குளம் விலக்கில் குண்டுமணி என்பவரின் பெட்டிக்கடை உள்ளது. இக்கடையின் முன்பு 25.6.2009-ம் தேதி இலந்தைக்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த அம்மாசி என்பவரின் மகன் பால்பாண்டி (28) என்பவரும் பாண்டி என்பவரும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக சோடா பாட்டில்களை உடைத்து சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளார்கள்.
அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சிவகாசி, லிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கருப்பையாத்தேவர் மகன் நாகராஜ் (48) என்பவர் வந்துள்ளார். சண்டை நடப்பதைப் பார்த்து விலக்கிவிடுவதற்காக வண்டியை நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் விலக்கிவிட்டுள்ளார். அப்போது நீங்கள் எப்படி எங்கள் விஷயத்தில் தலையிடலாம் என்று கூறி, கீழே உடைந்து கிடந்த சோடா பாட்டிலால் பால்பாண்டி, நாகராஜை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி 26.6.2009-ம் தேதி உயிரிழந்தார்.
இது தொடர்பாக வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பால்பாண்டிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.