முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரியில் புதன்கிழமை சிபிஐ போலீஸ் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை 3 பார்சலாக சீல் வைத்து கொண்டு சென்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:38 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரியில் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுமார் 12 மணி நேரம் சிபிஐ போலீஸ் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை 3 பார்சலாக சீல் வைத்து கொண்டு சென்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பல் மருத்துவக்கவுன்சில் ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கிய சீட்டுகளுக்கு, மேலாக கூடுதலான சீட்டுகள் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய ஆவணங்களை சிபிஐ போலீஸார் கைப்பற்றியதாக தெரிகிறது.

காலை 10.30 மணிக்கு உள்ளே நுழைந்த சிபிஐ போலீஸார் மாலை 3 மணிக்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அங்கு பல்வேறு கோப்புகளை கொண்டு வர சொல்லி ஆய்வு செய்தனர். பின்னர் மீண்டும் ராஜா முத்தையா  பல் மருத்துவக் கல்லூரிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். பல் மருத்துவப்புல முதல்வர், துறைத்தலைவர் மற்றும் நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இரவு 10.30 மணி வரை தனி, தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிக்கிய முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, 3 பார்சலாக பார்சல் செய்து சீல் வைத்து சிபிஐ போலீஸார் எடுத்துச் சென்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments