சிதம்பரம் : ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் கைது
சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை நகர போலீஸார் இன்று கைது செய்தனர்.
சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை நகர போலீஸார் இன்று கைது செய்தனர்.
பதவிஉயர்வில் எஸ்சி., எஸ்டி, ஒபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் டி.எஸ்.பிரேமலதா தங்கம் சிகாமணி தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட சிதம்பரம் காந்திசிலையிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது நகர போலீஸார் அவர்களை மறித்து 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பிரேமலதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவருக்கு எவ்வித தொடர்பு கிடையாது. இப்போராட்டம் கட்சி கொள்ளை விரோத செயலாகும். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங்க் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டிடம் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.
Advertisement