முகப்பு
தற்போதைய செய்திகள்

பூச்சிமருந்து குடித்து கரும்பு விவசாயி தற்கொலை முயற்சி!

சிதம்பரம் அருகே வட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உட்கார வைத்ததால் மனமுடைந்து பூச்சிமருந்து குடித்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:38 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உட்கார வைத்ததால் மனமுடைந்து பூச்சிமருந்து குடித்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே வட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ்கர் (41). கரும்பு விவசாயியான இவர் தனது வயலில் பயிரிட்டுள்ள கரும்பினை வெளி மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு ஏற்றி அனுப்பும் பணியில் ஈடுபட்டார். அப்போது சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர்கள் வெளி சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி அனுப்பக்கூடாது என பாஸ்கரை தடுத்து சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் விவசாயி பாஸ்கரை சோழத்தரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உட்கார வைத்து, பின்னர் வெளி சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மனஉளச்சல் அடைந்த விவசாயி பாஸ்கர் வியாழக்கிழமை மாலை பூச்சி மருந்து மயங்கி விழுந்தார். உடனே அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக கொண்டு வந்து சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.