முகப்பு
தற்போதைய செய்திகள்

இன்டர்நெட் சேவை இணைப்பு துண்டிப்பு:மின் கட்டணம் வசூல் செய்ய முடியாமல் மின்வாரியம் திணறல்

தனியார் நிறுவன இன்டர்நெட் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால், மின் கட்டணம் வசூல் செய்ய முடியாமல் மின் வாரியம் திணறி வருகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:52 AM
பகிர்:

தனியார் நிறுவன இன்டர்நெட் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால், மின் கட்டணம் வசூல் செய்ய முடியாமல் மின் வாரியம் திணறி வருகிறது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் செய்ய தனியார் நிறுவன இன்டர்நெட் சேவை இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதற்குரிய சேவைக் கட்டணத்தை மின்வாரியம் பல மாதங்களாக செலுத்தாத காரணத்தால், அந்த நிறுவனம் கடந்த 25 ஆம் தேதி முதல் இன்டர்நெட் சேவையை நிறுத்திவிட்டது.

இதனால் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மின் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிச. 26 ஆம் தேதி புதன்கிழமை முதல் மின் நுகர்வோர், மின் இணைப்பு கட்டணத்தை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் செலுத்தி வருகின்றனர்.

தபால் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மின் கட்டண உயர்வால் பாதிப்படைந்துள்ள நுகர்வோருக்கு சேவைக் கட்டணம் செலுத்துவது மூலமாக கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

மின் கட்டண வசூல் மையம் இயங்காததால் குறிப்பிட்ட காலத்துக்குள் மின் கட்டணம் செலுத்தாத நுகர்வோரின் மின் இணைப்புகளை துண்டிக்காமலும், அபராதம் வசூலிக்காமலும் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசத்தை மின்சார வாரியம் அளிக்க வேண்டும் என்று, நுகர்வோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோல (ஜன.12) முதல் 16 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாள்கள் பொங்கல் விடுமுறை வருவதால் மின் கட்டணத்தை செலுத்த முன்பு போல விடுமுறைக்கு பின்னர் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →