முகப்பு
தற்போதைய செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கோயில் சுவர் அகற்றம்: திருக்கோவிலூரில் சாலைமறியல்

திருக்கோவிலூரில் ஐந்துமுனை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கோவில் சுற்றுச் சுவர் அகற்றப்பட இருந்த நிலையில், பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:52 AM
பகிர்:

திருக்கோவிலூரில் ஐந்துமுனை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கோவில் சுற்றுச் சுவர் அகற்றப்பட இருந்த நிலையில், பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அண்மையில் திருக்கோவிலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இன்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.

அப்போது ஐந்துமுனை சந்திப்பு பகுதியில் அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான கங்கையம்மன் கோவில் சுற்றுச் சுவரை அதிகாரிகள் இடிக்க முயன்றனர். அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் நூற்றுக்கும் அதிகமானோர் சாலையில் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →