முகப்பு
தற்போதைய செய்திகள்

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்க தமிழக அரசு முயற்சியா?: எம்.பி. அழகிரி குற்றச்சாட்டு

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கடலூரில் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில்: மத்திய அரசின் திட்டங்களில் 100 நாள் வேலை உறுதித்திட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கிராமப் புறத்தில் சிறு பணி செய்யவேண்டும் என்று கூறி, அவர் வேலை செய்ததாகக் கருதி அவருக்கு ஊதியம் வழங்குகிறது. இதன்மூலம் 20 வயது பெண் முதல் 80 வயது மூதாட்டி

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தை திட்டமிட்டு முடக்க சில சதிவேலைகள் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெறுகிறது என கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கடலூரில் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில்: மத்திய அரசின் திட்டங்களில் 100 நாள் வேலை உறுதித்திட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கிராமப் புறத்தில் சிறு பணி செய்யவேண்டும் என்று கூறி, அவர் வேலை செய்ததாகக் கருதி அவருக்கு ஊதியம் வழங்குகிறது. இதன்மூலம் 20 வயது பெண் முதல் 80 வயது மூதாட்டி வரை வருமானம் ஈட்டி வந்தனர். மத்திய அரசும் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு கேட்கிற நிதியை அளித்து வந்தது.கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக மத்திய அரசு தாராளமாக நிதி வழங்கியது. இந்தியாவிலேயே தமிழகம் இந்த நிதியை அதிகமாக பயன்படுத்தி வந்தது.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. 100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்காக தற்போது தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து பெறுகிற நிதி 50 சதவீதம் குறைந்துவிட்டது.மேலும் இத்திட்டத்தின்படி வேலை செய்வதற்கான அளவீடும் மாற்றியமைக்கப்பட்டு வேலை கடுமையாக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதன்படி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் உறுப்பினராக உள்ள நபர் ஒருநாளைக்கு 56 கனஅடி மண்வெட்டியெடுக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சாதாரமாக ஒருவர் இப்பணியை செய்ய இயலாது. .இதை அரசே திட்டமிட்டு செய்கிறதா? அல்லது சில அதிகாரிகள் முதல்வருக்கு தெரியாமல் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. இருப்பினும் முதல்வர் தலையிட்டு கிராமப்புற மக்கள் ஈட்டி வந்த வருமானம் மீண்டும் அவர்களுக்கு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக பிரதமரையும், சோனியாகாந்தியையும் சந்தித்து முறையிட உள்ளேன். மேலும் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.அதற்காக கிராமப்புற மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி செயல்பாட்டு சங்கம் ஒன்றையும் தொடக்கி கிராமம்தோறும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் போராட இருப்பதாகவும் அழகிரி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →