ஏற்காடில் பயிற்சிக்கு வந்த சென்னை பொறியியல் கல்லூரி மாணவர் பலி
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிக்கு, சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 133 பேர் கட்டடக் கலை மற்றும் அளவையியல் தொடர்பான பயிற்சிக்காக நேற்று இரவு வந்தனர். இவர்களில் ஒரு மாணவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த மாணவர் விக்னேஸ்வரன் (20). இவர் சென்னையில் கிரசண்ட் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது தந்தை அன்பழகன். இவர் பல்லாவரம் தபால் அலுவலகத்தில் பணியில் உள்ளார்.
ஏற்காடுக்கு பயிற்சிக்காகச் சென்ற அவர், கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கியுள்ளார். இவர் பின்னர் சேலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.