பாலியல் பலாத்காரத்தை கண்டித்து அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு; மெளன அஞ்சலி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் புதுதில்லி மற்றும் தமிழகம், புதுச்சேரியில் மாணவிகளின் பாலியல் பலாத்காரம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் புதுதில்லி மற்றும் தமிழகம், புதுச்சேரியில் மாணவிகளின் பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து மரணமடைந்த புதுதில்லி மாணவிக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவ, மாணவியர்கள் புதுதில்லி மற்றும் தமிழகம், புதுச்சேரியில் மாணவிகளின் பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்தும், புதுதில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விரைவு விசாரணை நடத்தி, தீர்ப்பு மேல்முறையீடு செய்யாமல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும், பள்ளி, கல்லூரி மாணவியர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். ஊர்வலமாக சென்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் புதுதில்லியில் பாலியல் பலாத்காரத்தில் மரணமடைந்த மாணவிக்கு 2 நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தினர்.