முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீமெய்கண்டாருக்கு தத்துவ ஞானக்கோயில் அமைப்பதை வலியுறுத்தி பக்தர்கள் நடைபயணம்

ஸ்ரீமெய்கண்டாருக்கு தத்துவஞானக்கோயில் அமைப்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தொடங்கிய கோவை

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:58 AM
பகிர்:

ஸ்ரீமெய்கண்டாருக்கு தத்துவஞானக்கோயில் அமைப்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தொடங்கிய கோவை ஸ்ரீமெய்கண்டார் தத்துவ ஞான ஆராய்ச்சி மைய அறக்கட்டளையைச் சேர்ந்த திருத்தொண்டர் நடைபயணக்குழுவினர் சிதம்பரம் நகருக்கு இன்று வருகை தந்தனர்.

சைவ சித்தாந்த கொள்கைகளை தனிக்கோட்பாடாக வகைப்படுத்தியவர் ஸ்ரீமெய்கண்டார். மெய்கண்ட சாஸ்திரங்கள் 14 ஆகும். அப்பதினான்கினுள் தலைமணியாத் திகழும் சிவஞான போதத்தை மெய்கண்டார் அருளினார். இத்தகு சிறந்த சைவ சித்தாந்த முதல் குரவராகிய ஸ்ரீமெய்கண்டாருக்கும், அவரது தத்துவ ஞானக் கொள்கைகளுக்கும் நிலை வைப்பாக ஒரு ஞானக்கோயில் கோவை பகுதியில் ஸ்ரீமெய்கண்டார் தத்துவஞான ஆராய்ச்சி மைய அறக்கட்டளை சார்பில் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு மெய்கண்டார் அன்பு நெறித்தொண்டர்களை திரட்டும் வகையில் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் வரையிலான நான்காவது நடைபயணம் கடந்த ஜன.3-ம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கியது. பின்னர் திருவெண்ணைநல்லூர், பண்ருட்டி, காடாம்புலியூர், நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, புவனகிரி வழியாக சிதம்பரம் நகருக்கு நடைபயணக்குழுவினர் ஜன.9-ம் தேதி புதன்கிழமை வந்தடைந்தனர். ஸ்ரீமெய்கண்டார் மற்றும் நடைபயணக் குழுவினருக்கு கீழவீதி தேரடி அருகே உமாநாத தீக்ஷிதர் தலைமையில் பொதுதீட்சிர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.ஏற்கனவே கோவை-தஞ்சை வரை முதல் நடைபயணமும், கோவை-பவானி வரை இரண்டாவது நடைபயணமும், பவானி-திருவண்ணாமலை வரை மூன்றாவது நடைபயணமும் நடைபெற்றுள்ளது. நான்காவது நடைபயணமாக திருவண்ணாமலை முதல் தில்லை (சிதம்பரம்) வரை தற்போது முடிவுற்றுள்ளது. ஸ்ரீமெய்கண்டார் உருவச்சிலையுடன், மேள, தாளங்கள் முழங்க நடைபயணக் குழுவினர் சிதம்பரம் 4 வீதிகள் வலம் வந்தனர். பின்னர் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீமெய்கண்டாரின் சைவ சித்தாந்த கொள்கை தத்துவங்கள் குறித்து சொற்பொழிவும் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →