முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை மாவட்ட வறட்சிப் பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் குழு இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டது

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:58 AM
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் குழு இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டது. தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், எட்டு அமைச்சர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நத்தம் விஸ்வநாதன், கே.பி,முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், சே.தாமோதரன், கே.ஜெயபால், ஆர்.காமரஜ், செல்லூர் ராஜூ ஆகிய அமைச்சர்களுடன் 9 அதிகாரிகள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ஸ்ரீதர் உள்பட அதிகாரிகள் குழுவும் இந்த் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று, தரங்கம்பாடி வட்டம் காளியப்பநல்லூர் உள்ளிட்ட வறட்சியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

நாகை அருகே தெத்தி, தலைஞாயிறு, ஆலங்குடி, மணக்குடி, நீர்மூலை உள்ளிட்ட பகுதிகளிலும், வேதாரண்யம், வாய்மேடு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி உடன் இருந்து, வறட்சியால் பாதித்த பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →