முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தி, அவதூறு பரப்பி வருகிறார் கருணாநிதி: நாஞ்சில் சம்பத்

கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரத்தில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் க.கலைமணி, மாவட்ட அவைத் தலைவர் கலியமூர்த்தி, செஞ்சிலட்சுமி, தேன்மொழி காத்தவராயசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விரமாஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்) ஆகியோர் முன்நிலை வகித்தனர். நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வரவேற்றார்.

கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என வென்று, தமிழக முதல்வரான ஜெயலலிதாவை பிரதமராக்குவோம். தற்போது மின்வெட்டிற்கு திமுக ஆட்சிதான் காரணம். கடந்த 2001-2006-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வடசென்னை, நெய்வேலி பகுதிகளில் தலா 2000 மெகாவாட் மின்உற்பத்தி திட்டத்தை தொடங்க திட்டமிட்டார். அதனை அடுத்து ஆட்சி கலைக்கப்பட்டு பின்னர் வந்த திமுக ஆட்சியில் மக்கள் நலனை கவலைப்படாமலும், விஞ்ஞான ரீதியாக யோசிக்காமலும் அத்திடங்களை கிடப்பில் போட்டவர் கருணாநிதி. தமிழகஅரசை திவாலாக்கிவிட்டு சென்றவர் கருணாநிதி. தற்போது ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு துறையாக களைந்து சரி செய்து வருகிறார். கருணாநிதி ஆட்சியில் போக்குவரத்து துறை திவாலானது. தற்போது 3 ஆயிரம் புதிய பேருந்துகளையும், 2150 புதிய வழித்தடங்களையும் தொடங்கி லாபத்தில் இயக்க நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினால் 21 கோடி விவசாயிகள், 6 கோடி சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற அனைத்து கட்சி எம்பிக்களும் விலை போனார்கள். ஆனால் இந்தியாவிலேயே விலை போகாத கட்சி எம்பிக்கள், அதிமுக எம்பிக்கள் மட்டும்தான். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்த கருணாநிதி நாடாளுமன்றத்தில் அவரது கட்சி அதனை ஆதரித்து வாக்களித்தது. கேட்கும் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை, கொடுக்கும் இடத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதிலும் வெற்றி பெற வேண்டும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →