முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று மாலை நேரிட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர்.

Updated On : 11 ஜனவரி, 2013 at 5:45 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:31 PM

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று மாலை நேரிட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர்.

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் ரவீந்திரன் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணி இன்று நடைபெற்று கொண்டிருந்தது. இந்த ஆலையில் 50 அறைகள் உள்ளன.

இதில், தரைச்சக்கர பட்டாசு தயாரிக்கும் ஒரு அறையில் மட்டும் வெடி மருந்துகள் உராய்வின் காரணமாக இன்று மாலை 4 மணியளவில் வெடி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் ஒரு அறை முழுவதுமாக தரைமட்டமாயின. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 2 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

தகவல் அறிந்த விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன், சாத்தூர் டிஎஸ்பி சின்னையா, சாத்தூர் தாசில்தார் மைக்கேல் ராஜ், சிவகாசி தனி தாசில்தார் சாந்தா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

சாத்தூர் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

உயிரிழந்தவர்களில் ஒருவர் மேட்டமலைப் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (50) என்பது தெரிய வந்துள்ளது, மற்ற இருவரது உடல்களும் அடையாளம் காணப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.