முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை இல்லை: ஆண்டாள் கோயிலில் விஜயகாந்த்தின் அரசியல் பேச்சு!

தன் மீது அவதூறு வழக்குகள் தொடர்வது, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை இல்லை என்பதையே காட்டுவதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கூறினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

தன் மீது அவதூறு வழக்குகள் தொடர்வது, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை இல்லை என்பதையே காட்டுவதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கூறினார்.

வெள்ளிக்கிழமை இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலில் நடைபெற்று வரும் தங்க விமானம் அமைக்கும் பணிக்கு 10 பவுன் தங்கத்தை, நாச்சியார் டிரஸ்ட் ஊழியர் ராஜாராம் மற்றும் வேதாராம் பட்டர் ஆகியோரிடம் வழங்கிய விஜயகாந்த் பின்னர், கோயில் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

மக்கள் பிரச்னைகளைப் பேசினால், என் மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா எவ்வளவு விமர்சனம் செய்தார். எவ்வாறெல்லாம் பேசினார். ஆனால் கருணாநிதி என்ன அவதூறு வழக்கு தொடர்ந்தாரா? என் மீது அவதூறு வழக்குகள் தொடர்வது, ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை குணம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

மக்களுக்கு இலவசங்களைத் தருகிறார்கள். மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பதுதான் இது. எம்.ஜி.ஆரைவிட, ஜெயலலிதா என்ன செய்தார்? செய்துவிட்டார்? செய்ய முடியும் என்றார் விஜயகாந்த்.

மேலும் ஆண்டாள் கோயில் திருப்பணிக்கு தே.மு.தி.க.வினர் தாராளமாக உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா, விருதுநகர் சட்டப் பேரவை உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

ஸ்ரீஆண்டாள் கோயிலில் அமர்ந்துகொண்டு, அதுவும், ஒரு அரசு சார்ந்த அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு, அந்த இடத்தை அரசியல் மேடையாக்கிப் பேசியது, அங்கிருந்த இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →