ஸ்ரீவிலி. அருகே இரு கிராமத்தினரிடையே மோதல்: 16 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்டது கடம்பன்குளம் கிராமம். இங்கு சுமார் 150 ஆதிதிராவிட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இக் கிராமத்திற்கு
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி. அருகே இரு கிராமத்தினரிடையே மோதல்: 16 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்டது கடம்பன்குளம் கிராமம். இங்கு சுமார் 150 ஆதிதிராவிட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இக் கிராமத்திற்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்டது கடம்பன்குளம் கிராமம். இங்கு சுமார் 150 ஆதிதிராவிட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இக் கிராமத்திற்கு அடுத்த 1 கி.மீ. தூரத்தில் அச்சங்குளம் கிராமம் உள்ளது. இங்கு வேறொரு சமுதாயத்தினர் குடியிருந்து வருகிறார்கள். அச்சங்குளம் கிராமத்திற்கு தினமும் காலை மற்றும் மாலையில் அரசு நகர் பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சென்று வருகிறது. அச்சங்குளத்திலிருந்து பஸ் புறப்படுவதால், அக்கிராமத்தினர் பஸ்ஸின் இருக்கையில் அமர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்கிறார்கள். பஸ் கடம்பன்குளம் வரும் போது உட்கார இடம் இருக்காது. இதனால் சில நேரங்களில் கடம்பன்குளம் கிராம மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பஸ் வரும் போதே, தங்கள் கிராமத்தில் ஏறிக்கொண்டு, அச்சங்குளம் சென்று அங்கிருந்து பஸ்ஸில் அமர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வார்கள். இதில் இரு கிராமத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும் போது, இரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் பஸ்ஸில் இடம் பிடிப்பதில் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இரு தரப்பு மாணவர்களும் பஸ்ஸில் சேர்ந்து பயணம் செய்யும் போது, அவரவர் சமுதாய தலைவர்கள் குறித்த பாடல்களை செல்போனில் போட்டு வந்துள்ளனர். இதனால் கடும் பதற்றம் ஏற்பட்டு இரு கிராமத்தினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொது அமைதியை பேணுவதற்காக ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த இ.பாண்டி (45), ரா.ரணவீரன் (40), மு.சின்னகாளிமுத்து (60), க.இருளப்பந் (45), க.கருப்பையா (40), மு.சின்னகருப்பசாமி (50), கோ.பெருமாள் (55), ப.மகாலிங்கம் (43) ஆகியோர் மீதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த சி.பெரியகுருவு (60), சி.தர்மர் (61), சு.ராஜேந்திரன் (56), மா.மனோகரன் (47), வே.செல்வராஜ் (50), செ.மாரியப்பன் (45), கி.ராஜகுரு (55), சு.மாரியப்பன் (54) ஆகியோர் மீதும் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.