முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் கரும்பு, மஞ்சள் கொத்து அதிக விலைக்கு விற்பனை

கடலூர் மாவட்டத்தில் போதிய நீரின்றி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தானே மற்றும் நிலம் புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு பெருத்த நஷ்டத்தில் உள்ளனர் விவசாயிகள். தற்போது

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:01 AM
பகிர்:

சிதம்பரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் போதிய நீரின்றி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தானே மற்றும் நிலம் புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு பெருத்த நஷ்டத்தில் உள்ளனர் விவசாயிகள். தற்போது போதிய நீரின்றி கரும்பு பயிர் போதிய வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து, வந்த விலைக்கு வெளி மாவட்ட வியாபாரிகளிடம் விற்றனர்.இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகைக்காக சிதம்பரம் நகர வீதிகளில் பன்னீர் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, சாமந்தி பூ உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கரும்பு ரூ.25 முதல் ரூ.30 வரையும், மஞ்சள் கொத்து ரூ 10-ம், இஞ்சி கொத்து ரூ.10-ம் என  விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →