முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி: பெண் கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூரைச் சேர்ந்த ஆசைத்தம்பி. இவரது மனைவி சுகந்தி கீரப்பாளையம் ஒன்றியக் கவுன்சிலராக உள்ளார். இவர் கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவமாலாவிடம் சத்துணவுத்துறையில் வேலை வாங்கித்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:01 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூரைச் சேர்ந்த ஆசைத்தம்பி. இவரது மனைவி சுகந்தி கீரப்பாளையம் ஒன்றியக் கவுன்சிலராக உள்ளார். இவர் கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவமாலாவிடம் சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.25 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது. வேலை வாங்கித் தராததால் சிவமாலா கணவர் அறிவழகனின் அண்ணன் அன்பழகன் சுகந்தியிடம் பணத்தை திருப்பி கேட்டபோது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதேபோல் பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி விஜயகுமாரி தான் உள்பட 18 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக தலா ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு சுகந்தி ஏமாற்றிவிட்டதாக தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுகந்தி மீது இரு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →