சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர்களிடம் செல்போன்கள் திருடிய 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறையில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் தினேஷ்குமார். அவர் சம்பவத்தன்று பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் சட்டை பையில் செல்போன் வைத்துவிட்டு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உடற்கல்வித்துறை மாணவர்களிடம் செல்போன்கள் திருடிய 9-ம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறையில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் தினேஷ்குமார். அவர் சம்பவத்தன்று பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் சட்டை பையில் செல்போன் வைத்துவிட்டு, சட்டையை கழற்றி வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சட்டை பையிலிருந்து செல்போனை திருட முயன்ற சிறுவனை அருகிலிருந்தவர்கள் பிடித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீஸார் விசாரணையில் பிடிப்பட்ட அச்சிறுவன் சிதம்பரம் அங்காளம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பயிலும் மாணவர் சேதுராமன் (15) என்றும், இவரும் 9-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவரான வசந்த் (15) ஆகிய இருவரும் சேர்ந்து 8 செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து செல்போன்களை திருடிய சேதுராமன, வசந்த் மற்றும் செலபோனை இவர்களிடமிருந்து வாங்கி விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் முகமதுபைசல் (21), காஜா மொய்தீன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.