கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் லாரி மோதி சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற அவரது சகோதரி காயம் ...
தற்போதைய செய்திகள்கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் லாரி மோதி சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற அவரது சகோதரி காயம் ...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற அவரது சகோதரி காயம் அடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சித்தாலம்புத்தூர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயப்பாண்டி மனைவி பாண்டியம்மாள் (40). இவரும் இவரது சகோதரி முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்த ராமர் மனைவி சந்திரமதி (31) யும் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து பாதயாத்திரை செல்ல முடிவு செய்திருந்தனர்.இன்று பாதயாத்திரையை தொடர்ந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் ஈஞ்சார் விலக்கு அருகே இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரமதி காயம் அடைந்தார். லாரி நிற்காமல் சென்றுவிட்டது.
இது குறித்து சந்திரமதி, மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.