ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் நிறைவு
ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் 7-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, வெவ்வேறு மண்டபங்கள் வழியே எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருளினார். ஒவ்வொரு நாளும்
தற்போதைய செய்திகள்ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் நிறைவு
ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் 7-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, வெவ்வேறு மண்டபங்கள் வழியே எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருளினார். ஒவ்வொரு நாளும்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாளுக்கு நடைபெற்ற மார்கழி நீராட்ட (எண்ணெய்காப்பு) உற்சவம் நேற்று(திங்கள்கிழமை) இரவு நிறைவு பெற்றது.
ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் 7-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, வெவ்வேறு மண்டபங்கள் வழியே எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருளினார். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஸ்ரீஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-ம் திருநாளான நேற்று(திங்கள்கிழமை) தங்கப்பல்லக்கு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள் அருள்பாலித்தார். இரவு ஸ்ரீமணவாள மாமுனிகள் மங்களாசாசனம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ச.சுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.
இன்று ஸ்ரீஆண்டாளுக்கு, ரெங்கமன்னாருடன் சேர்த்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, பின் மூலஸ்தானம் எழுந்தருளினார்.