முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்னை காரணமாக விடுமுறையில் வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:03 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்னை காரணமாக விடுமுறையில் வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், சந்திக்கிணறு தெருவைச் சேர்ந்தவர் சேது மகன் ஆனந்தகுமார் (37). இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், சந்தனபாரதி, ஹர்ஷிதா என்ற இரு குழந்தைகளும் உண்டு. ஆனந்தகுமார், ராணுவத்தில் சிக்னல் பிரிவில் நாக்பூரில் நாயக் ஆக வேலை செய்து வந்தார். 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 20 நாள் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மனைவி தேன்மொழி கணவருக்குத் தெரியாமல் தனது மகளுக்கு வரும் 20-ம் தேதி சந்தனமாரியம்மன்கோயிலில் மொட்டை போடப்போவதாக உறவினர்கள் அனைவருக்கும் கூறியிருந்துள்ளார். ஆனந்தகுமார் எனக்குத் தெரியாமல் எப்படி குழந்தைக்கு மொட்டை போடுவதை உறவினர்களுக்கு கூறலாம் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியை தன்னுடன் நாக்பூர் வருமாறும் வலியுறுத்தியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே மனம் உடைந்த ஆனந்தகுமார் மொட்டமாடிக்குச் சென்று இரவு சாப்பிடாமல் கதவை பூட்டிக் கொண்டாராம். காலை அவரது தந்தை போய் கதவை தட்டி வெகு நேரம் ஆகியும் திறக்காததால், உடைத்துச் சென்று பார்த்த போது ஆனந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →