முகப்பு
தற்போதைய செய்திகள்

காணும்பொங்கல்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர்கோயிலில் திரண்ட மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு சிதம்பரத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று காலை முதல் சாப்பாடு செய்து கொண்டு நடராஜர் கோயிலுக்கு வந்த வன்னம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:04 AM
பகிர்:

காணும் பொங்கலை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர்கோயிலில் புதன்கிழமை சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  திரண்டனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு சிதம்பரத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று காலை முதல் சாப்பாடு செய்து கொண்டு நடராஜர் கோயிலுக்கு வந்த வன்னம் இருந்தனர். பின்னர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் பெண்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், கோலாட்டம், கும்மியடித்தல் மற்றும் கபடி, கோ-கோ விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதே போன்று சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மாங்குரோவ் காடுகளை படகு மூலம் சுற்றிப் பார்க்க திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெளிமாவட்டங்களிலிருந்து கார், வேன்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து படகு சவாரி செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →