முகப்பு
தற்போதைய செய்திகள்

தேவகோட்டை அருகே ஊராட்சிமன்ற தலைவருக்கு கத்திக்குத்து

வீரை ஊராட்சி தலைவராக இருப்பவர் ரவிச்சந்திரன். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மகேந்திரனுக்கும் ஊராட்சிமன்ற தேர்தல் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:04 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முன்விரோதம் காரணமாக ஊராட்சிமன்ற தலைவரை கத்தியால் குத்தியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீரை ஊராட்சி தலைவராக இருப்பவர் ரவிச்சந்திரன். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மகேந்திரனுக்கும் ஊராட்சிமன்ற தேர்தல் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஊரில் உள்ள ஊரணியிலிருந்து விவசாயத்திற்கு நீர் பாய்ச்சுவது சம்மந்தாக ஊர்க்கூட்டம்  நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றுள்ளது. இதில் ஊரணியில் நீர் குறைவாக இருப்பதால் பேசி முடிவுசெய்து நீரை பாய்ச்சவேண்டும் என ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவதாத முடிவில் மகேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவிச்சந்திரனை குத்தியதாக தெரிகிறது. இதில் ரவிச்சந்திரனின் விலாவில் கத்தி பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை ஊர்க்காரர்கள் மீட்டு தேவகோட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாலுகா ஆய்வாளர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரண செய்து வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →