ஸ்ரீவிலி. அருகே முன்விரோதத்தில் மோதல்: இருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்கரிசல்குளத்தில் முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்கரிசல்குளத்தில் முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன் கரிசல்குளம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரும் இதே இடத்தைச் சேர்ந்த சங்கையாக்கோனார் மகன் திருப்பதி (37) என்பவருக்கும் வேலைபார்க்கும் இடத்தில் பணம் பட்டுவாடா செய்வதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஊர் பஞ்சாயத்தார் கூடி பேசி முடித்துள்ளார்கள். இந்நிலையில் இருவரும் வத்திராயிருப்பிலிருந்து அயன் கரிசல்குளத்திற்கு பஸ்ஸில் வரும்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விஸ்வநாதன் வீட்டிற்கு வந்த திருப்பதி, அங்கிருந்த அவரது மனைவி சுந்தரேஸேவரி (37) யிடம் ஆபாசமாகப் பேசி உன் கணவரை கொலை செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டினாராம். இது குறித்து சுந்தரேஸ்வரி, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.
திருப்பதியின் மனைவி மகேஸ்வரி (30) என்பவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், இதே இடத்தைச் சேர்ந்த கணபதி மகன் விஸ்வநாதன் (40) மற்றும் அவரது மனைவி சுந்தரேஸ்வரி ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு வந்து ஆபாசமசாகப் பேசி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விஸ்வநாதனைக் கைது செய்தனர்.
Advertisement