தற்போதைய செய்திகள்

அகில இந்திய ஹாக்கி: விசாகப்பட்டினம் அணி வெற்றி

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள்திங்கள்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி வஉசி துறைமுக மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியைமாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி தொடக்கி வைத்தார். துறைமுக பொறுப்புக் கழகதலைவர் (பொறுப்பு) சு. நடராஜன், செயலர் மோகன், பொருளாளர் ரகுபதி,

தி. இன்பராஜ்

தூத்துக்குடி வஉசி துறைமுக மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கிய அகிலஇந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டியின் முதல்ஆட்டத்தில் விசாகப்பட்டினம் அணி வெற்றி பெற்றது. அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுபாட்டு குழு மற்றும்தூத்துக்குடி வஉசி துறைமுக விளையாட்டு குழு ஆகியவை சார்பில் நடத்தப்படும்

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள்திங்கள்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி வஉசி துறைமுக மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியைமாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி தொடக்கி வைத்தார். துறைமுக பொறுப்புக் கழகதலைவர் (பொறுப்பு) சு. நடராஜன், செயலர் மோகன், பொருளாளர் ரகுபதி, துறைமுககண்காணிப்பு அலுவலர் ராமகிருஷ்ணன்,  தலைமை பொறியாளர் ரவீந்திரன்உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்தப் போட்டியில் கொல்கத்தா, பாரதீப், மும்பை, விசாகபட்டணம், சென்னை,மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகிய ஆறு பெரியதுறைமுகங்களின் ஹாக்கி விளையாட்டு அணியினர் பங்கேற்றுள்ளனர்.

போட்டிகள் ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்போட்டியில் மும்பை அணியும், விசாகப்பட்டினம் அணியும் மோதின.தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இருப்பினும், விசாகப்பட்டினம் அணி வீரர்கள் பெடரிக், பவானி சங்கர்ஆகியோர் இரு கோல்களை அடித்தனர். மும்பை அணி தரப்பில் அந்த அணி வீரர் திக்விஜய் நாயக் மட்டும் கோல்அடித்தார். இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் விசாகப்பட்டினம் அணி வெற்றிபெற்றது.இரண்டாவது ஆட்டத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும், கொல்கத்தா துறைமுக அணியும் மோதின. இரு அணி வீரர்களும் சம பலத்துடன் காணப்பட்டதால்ஆட்டம் விறுவிறுப்பாக காணப்பட்டது. இருப்பினும், தூத்துக்குடி அணிதரப்பில் அபினேஷ் பால் ஒரு கோல் அடித்தார். கொல்கத்தா அணி தரப்பில் அந்த அணியின் வீரர் மக்பீர் சிங் கோல் அடித்தார். ஆட்டம் இறுதி வரை இரு அணிவீரர்களும் தலா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்ததால் ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT