தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் 13 பேர் திடீர் இடமாற்றம்

தூத்துக்குடி வட்டாட்சியராக பணியாற்றி வரும் கலியுகவரதன் அரசு கேபிள்டிவி வட்டாட்சியராகவும், அவருக்குப் பதிலாக விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பிரிவில்

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்துமாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி வட்டாட்சியராக பணியாற்றி வரும் கலியுகவரதன் அரசு கேபிள்டிவி வட்டாட்சியராகவும், அவருக்குப் பதிலாக விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பிரிவில் பணியாற்றிய ஆழ்வாரம்மாள் தூத்துக்குடி வட்டாட்சியராகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பட்டோர் பிரிவு (கல்வி உதவித்தொகை)வட்டாட்சியராக பணியாற்றி வந்த நல்லசிவன், திருச்செந்தூர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் வட்டாடச்சியராக இருந்த சங்கரநாராயணன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முத்திரைப் பிரிவு வட்டாட்சியராக இருந்த நெல்லைநாயகம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் மாடசாமி, தேர்தல் பிரிவு வட்டாட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியராகவும், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ராமசுப்பரமணியன் சிப்காட்நிலம் கையகப்படுத்தும் வட்டாட்சியராகவும் நியமிக்கப்ட்டுள்ளனர்.ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை வட்டாட்சியராக இருந்த ரமேஷ் கோவில்பட்டி வட்டாட்சியராக நியமிக்கப்ட்டுள்ளார். கோவில்பட்டி வட்டாட்சியர் நடராஜன் விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்டவட்டாட்சியராக நியமிக்கப்ட்டுள்ளார். விளாத்திகுளம் சமூக பாதுகாப்புதிட்ட வட்டாட்சியர் செல்வகுமார், விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பிரிவு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.  தூத்துக்குடி கலால்துறை அலுவலர் சுப்பையா ஆதிதிராவிடர் நலத்துறைவட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியராக இருந்த சங்கரலிங்கம் கோட்ட கலால் அலுவலக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT