ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கல்யாணிபுரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த குருசாமி மகள் பழனியம்மாள் (38). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த வடக்குத்தெரு தடியன்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கல்யாணிபுரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த குருசாமி மகள் பழனியம்மாள் (38). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த வடக்குத்தெரு தடியன்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கல்யாணிபுரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த குருசாமி மகள் பழனியம்மாள் (38). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த வடக்குத்தெரு தடியன் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. மூன்று குழந்தைகள் உண்டு. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அரளி விதையை அரைத்துத் தின்ற பழனியம்மாள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்து பழனியம்மாளின் சகோதரர் மோகன் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.