தற்போதைய செய்திகள்

பணியிட மாற்றம் காரணமா? கூட்டுறவு சார் பதிவாளர் தூக்கில் தொங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் நூக்குபீடி கூட்டுறவு சார்பதிவாளராகப் பணியாற்றும் ராகவன்(56) என்பவர் இன்று திடீரென தூக்கில் தொங்கினார். இதற்கு பணியிட மாற்றம் காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கவிதன்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் நூக்குபீடி கூட்டுறவு சார்பதிவாளராகப் பணியாற்றும் ராகவன்(56) என்பவர் இன்று திடீரென தூக்கில் தொங்கினார். இதற்கு பணியிட மாற்றம் காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவர், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 23ம் தேதி பணியிட மற்றம் செய்யப்பட்டு, திருச்செந்தூர் பகுதி அலுவலகத்துக்கு பணியில் சேர்ந்தார். அவருக்கு நாசரேத் நூக்குபீடி கூட்டுறவு சார் பதிவாளராக பணி வழங்கப்பட்டது.

விடுமுறைக்கு ஊருக்குச் சென்றவர், நேற்றுதான் பணிக்கு திரும்பினார். இந்நிலையில், இன்று காலை அவர் கேபிள் வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அறிந்த போலீஸார், குடும்பப் பிரச்னை காரணமாகவோ அல்லது பணியிட மற்றம் பிடிக்காததன் காரணமாகவோ அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT