முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

விருதுநகரில் கல்லூரி மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:45 PM

விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர், அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில், விடுப்பு அதிகம் எடுத்துள்ளதால் நீ கல்லூரியை விட்டு நின்றுகொள் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவர் விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தில் தன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.