இளவரசன் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்: வைகோ
விருதுநகரில் வருகிற செப்-15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் பெரிய அளவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்வதற்காக மதிமுக பொதுச்
இளவரசன் மரணம் குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டார்.
விருதுநகரில் வருகிற செப்-15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் பெரிய அளவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகருக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அப்போது இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தர்மபுரி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் மர்மமான முறையில் ரயில்பாதையில் உயிரிழந்து கிடந்தார். இந்த நிலையில் தாய்-தந்தையரிடம் வேலைக்கு போய் நல்ல நிலையில் வருவதாக கூறிச் சென்றவர் உயிரிழந்தது எப்படி என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், தற்கொலையா, கொலையா எனத் தெரியாத நிலையிருந்து வருகிறது.இந்தச் சம்பவத்தால் தர்மபுரி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், இப்பகுதியில் ஜாதி மோதல் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். எனவே இளவரசன் உயிரிழந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய நீதி விசாரணை செய்ய வேண்டும் என மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டார்.
Advertisement
பின்னர் 4 வழிச்சாலையில் மாநாடு நடத்துவதற்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில், புதுபேருந்து நிலையம் அருகே 4 வழிச்சாலை மீதுள்ள தனியார் நூற்பாலை அருகிலும், சூலக்கரைக்கும்-மருளூத்துக்கும் இடையே உள்ள தனியார் நூற்பாலை அருகிலும் இடங்களை பார்வையிட்டார். அப்போது உடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராஜன், மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.